வேளாண் விளைபொருட்களுக்கான புவிசார் குறியீடு அங்கீகாரம்!
தமிழக அரசால், தமிழகத்தின் பாரம்பரிய வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு (GI) அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிக்கு மாபெரும் உந்துதல் அளிக்கப்பட்டது. வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின்(TANSAMB) உதவியுடன் மதுரை வேளாண் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையம் (MABIF), புவிசார் குறியீடு பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
இந்த முயற்சியின் பலனாக, பண்ருட்டி முந்திரி, பண்ருட்டி பலாப்பழம், விருதுநகர் சம்பா வத்தல், இராமநாதபுரம் சித்திரைக்கார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை மற்றும் செட்டிக்குளம் சின்ன வெங்காயம் ஆகிய ஆறு பாரம்பரிய வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வெற்றியின் முதன்மை காரணமாக விளங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், மதிப்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் எங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இந்நிகழ்வில் முக்கிய பங்கு வகித்த தமிழக அரசு, வேளாண்மை – உழவர் நலத்துறை, தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம், இந்திய அறிவுசார் சொத்துரிமை மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), மதுரை வேளாண்மைக் கல்லூரி & ஆராய்ச்சி நிலையம், தேசிய விவசாய & கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD) மற்றும் புவிசார் குறியீடு வழக்கறிஞர் திரு. சஞ்சய் காந்தி ஆகியோருக்கும் எங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த புவிசார் குறியீடு அங்கீகாரம், பாரம்பரிய வேளாண் பொருட்களின் மதிப்பை உயர்த்துவது மட்டும் அல்லாமல், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உறுதுணையாக இருக்கும் என நம்புகின்றோம்!






